தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், ஜெயம் ரவியுடன் இறைவன் மற்றும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் முதன்மை ரோலில் நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும், படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் கூட கமிட்டாகியுள்ளார் என தெரிவிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் இப்படத்திற்கு தி டெஸ்ட் என தலைப்பு வைத்துள்ளனர்.
நயன்தாரா முதல் முறையாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post