எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத்
தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய
மக்கள் சக்தியினரால் பாரிய போராட்டமொன்றும் பத்தரமுல்லை, நாடாளுமன்ற
வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி அமைச்சர்
உதயகம்மன்பிலவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
ஐக்கிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மீதான வாக்கெடுப்புஇன்று இடம்பெறவுள்ள நிலையில், இதற்கு மேலும்
வலுசேர்க்கும் விதமான நேற்று பத்தரமுல்லையில் போராட்டமொன்று இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சந்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து பேரணியாக
முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சியினர், சிவில்
சமூகப் பிரதிநிதிகள், பொது அமைப்பினர், மக்கள் என பலரும் கலந்து கொண்டு
அரசாங்கத்திற்கு தங்களின் எதிர்ப்பை காண்பித்திருந்தனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற வளாத்திற்கு அருகில் சென்று, பதாதைகளை ஏந்தியும்
கோஷமெழுப்பியும் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
Discussion about this post