வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
- வாழைப்பூவின் முக்கிய நன்மையாக பார்க்கப்படுவது பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும்.
- வயிற்று வலி உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம்.
- வாழைப்பூ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாகும், இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்கிறது.
- வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்தரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.
- உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வர உஷ்ணம் உடையும்.
Discussion about this post