லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
விலைக் குறைப்பு இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள் இன்று (டிசம்பர் 23) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.
பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 05 ரூபா குறைக்கபட்டு 185.00 ரூபா எனவும் சிவப்பு பயறு ஒரு கிலோவுக்கு 11 ரூபா குறைக்கப்பட்டு 374.00 ரூபா எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு மீன் 425 கிராம் ஒன்றுக்கு 15 ரூபா குறைக்கப்பட்டு 475.00 ரூபாவாகவும், மிளகாய் ஒரு கிலோவுக்கு 15 ரூபா குறைக்கப்பட்டு 178.00 ரூபாவாகவும்,
நெத்தலி ஒரு கிலோவுக்கு 50 ரூபா குறைக்கப்பட்டு 1,100.00 ரூபாகவும் வெள்ளை சர்க்கரை ஒரு கிலோவுக்கு 04 ரூபா
குறைக்கப்பட்டு 220.00 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
Discussion about this post