அரச நிறுவன தலைவர்களால் மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் நட்சத்திர ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாக கூட்டங்களின் போது நீண்ட காலமாக நட்சத்திர ஹோட்டல்களின் உணவுகளை சாப்பிடுவது வழக்கமானதொன்றாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆயினும் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திக் கொண்டு இவ்வாறான ஆடம்பர செலவுகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல.
அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post