ஹாங்காங் அருகே கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கியதில், 27 பேர் மாயமாகியுள்ளனர். தென்சீன கடல் பகுதியில், மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கப்பல் இரண்டாக உடைந்து நொறுங்கியது.
இதனால், கப்பலில் பயணித்த 30 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், கப்பலில் பயணித்த எஞ்சிய 27 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், காணாமல் போன 27 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹாங்காங் நகரத்தின் தென் மேற்கு பகுதியில் 300 கிலோ மீற்றர் தொலைவில் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கப்பல் எந்த நாட்டை சேந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர்.
மாயமானவர்கள் நடுக்கடலில் மூழ்கி உள்ளதால், அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ஹாங்க் அரசின் விமான மீட்பு குழு தெரிவித்துள்ளது
Discussion about this post