மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகளாக இருந்தாலும் தனது நடிப்பினால் தனக்கென்று தனி அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.
மேலும் தனது சினிமா துறையின் ஆரம்பகால கட்டத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.
அட்லீ தயாரிப்பில் வருண் தவான் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சில பாலிவுட் பட வாய்ப்புகளும் கீர்த்தியை தேடி வருகிறதாம்.
இன்று நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் அவரை வாழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷின் சம்பளம் விவரம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் அவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 40 முதல் ரூ. 45 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Discussion about this post