நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் தொழிலதிபராக இருக்கும் சொர்ணலிங்கம் என்பவரின் மகள் ஆவார். லண்டனில் பிறந்து வாழ்ந்து இவர் அவ்வப்போது இந்தியா வரும் போது விஜய்யை பார்க்க வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு வீட்டாராம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். விஜய் – சங்கீதா ஜோடிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இந்நிலையில், விஜய்யின் மனைவியான சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதில், சங்கீதாவின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விஜய் தனது மனைவியின் பெயரில் பல கோடி சொத்துக்களை வாங்கி வைத்துள்ளாராம்.
மேலும் சங்கீதாவின் தந்தையும் தனது மகளின் பெயரில் பல கோடி மதிப்பினால சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த சொத்து விவரம் குறித்து கூறப்படும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post