Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நடிகர் வடிவேல் பாணியில் தமிழரசு கட்சி தலைவர் மாவையின் செயல்…! கடுமையாக சாடும் தம்பிராஜா

September 18, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நடிகர் வடிவேல் பாணியில் தமிழரசு கட்சி தலைவர் மாவையின் செயல்…! கடுமையாக சாடும் தம்பிராஜா
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) அவருடைய மகன் கலைஅமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராஜா குற்றச்சாட்டினார்.

யாழ் (jaffna) ஊடக அமையத்தில் நேற்று (7.9.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலை அமுதன் பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது

மாவை மற்றும் மகனின் செயற்பாடு

நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் வாக்குச் சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என பணம் வாங்கியவர்கள் எல்லோருக்கும் புள்ளடி போட்ட வாக்குச் சீட்டை காண்பித்த மையை படத்தில் பார்த்திருக்கிறோம்.

அவ்வாறு சம்பவமாக மாவை மற்றும் மகனின் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.

சஜித்துக்கு ஆதரவு தமிழரசு கட்சி தீர்மானம் என கூறும் தலைவர் மாவை ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டுக்கு வந்தபோது நீங்கள் தான் ஐனாதிபதியாக வேண்டும் என்கிறார்.

சஜித்துக்கு தமிழரசு ஆதரவு

அதன் பின் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தில் சஜித்துக்கு தமிழரசு ஆதரவு வழங்கியதில் மாற்றம் இல்லை எனக் கூறிவிட்டு வரும் வழியில் கிளிநொச்சியில் பொது வேட்பாளர் ஆதரவு மேடையில் ஏறினார்.

மகன் கலை அமுதன் யாழ் வந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் மறுநாள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார். இவற்றையெல்லாம் நோக்கும் போது பணம் வாங்கியவர்களிடம் எமது இனத்தை காட்டி கொடுத்து சந்தர்ப்பவாத அரசியலை தகப்பனும் மகனும் செய்கிறார்கள்.

பணம் வழங்கியவர்கள் யாருக்கு வாக்கு போட்டீர்கள் என கேட்டால் வடிவேல் பானில் இருவரும் வாக்கு சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என சொல்லு நிலை ஏற்படும். தந்தை செல்வாவால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட தமிழரசு கட்சி இன்று பணத்துக்காக பல கோணங்களில் பிரிந்து நிற்கிறது.

பெருந்தலைவர் உருவாக்கிய கட்சி

தந்தை செல்வாவின் மனைவி இந்த அரசியல் செயற்பாடுகள் உங்களுக்கு வேண்டாம் என மண்ணை அள்ளி அவர் மீது தூவிய போதும் அதனை தட்டிவிட்டு இனத்துக்காக என்னால் முடிந்தவரை போராடுவேன் என கூறிய பெருந்தலைவர் உருவாக்கிய கட்சி.

ஆகவே தமிழரசு கட்சியை சீரழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்களால் விரைவில் துரத்தி அடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

தங்க விலையில் தொடரும் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Next Post
தங்க விலையில் தொடரும் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.