உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டிய கலைஞரான வாணி கணபதி, பியாசி நாடி என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். பின்பு 1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தில் நடிகர் கமலுடன் ஜோடியாக நடித்தார்.
இப்படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனை திருமணம் செய்வதற்கு பல நடிகைகள் போட்டி போட்டதாக நடிகை குட்டிபத்மினி சமீபத்தில் கூறியிருந்தார்.
அவ்வாறு போட்டி போட்ட நடிகைகள் ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, நடிகை ரேகா இவர்களை வேண்டாம் என்று கூறிவிட்டு 1978ம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 10 ஆண்டுகள் மட்டும் நீடித்த நிலையில் 1988ம் ஆண்டு இவருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்பு இரண்டாவதாக நடிகை சரிகாவை திருமணம் செய்த கமல்ஹாசனுக்கு, ஸ்ருதி மற்றும் அக்ஷரா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த ஜோடிகளும் சில ஆண்டுகள் மட்டும் வாழ்ந்துவிட்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மகனின் திருமணத்தில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த புகைப்படத்தினை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தில் ராதிகா, லிஸி, சுஹாசினி, வாணி கணபதி கலந்து கொண்டுள்ளனர். எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத கமலின் முன்னாள் மனைவி வாணி கணபதியை பார்த்த ரசிகர்கள் பூரிப்படைந்து வருகின்றனர்.
அன்று மட்டுமின்றி இன்றும் நடிகை வாணி கணபதி அழகில் அனைவரையும் மெய்சிலிர்க்கவே வைத்துள்ளார்.
Discussion about this post