ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு சுத்தமான இரத்தம் அவசியம். இரத்தம் அசுத்தமாவதால் ஏராளமான நோய்கள், தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல் பருமன், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் இரத்தம் அசுத்தம் அடைகின்றன.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள்
எலுமிச்சை சாறு இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு செரிமான பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
எலுமிச்சை சாறு அமிலத்தன்மை வாய்ந்தது. இதில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இதன்மூலம் இரத்தத்தின் pH அளவை மாற்ற முடியும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் பீட்டலைன், நைட்ரேட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை இரத்தத்தை சுத்தம் செய்ய பயன்படுகின்றன.
பிராக்கோலி
பிரக்கோலியில் விட்டமின் சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிகின்றது.
Discussion about this post