இலங்கை சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) காலை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இடம்றெ்ற வாக்கெடுப்பின் போது குறித்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.
ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சட்டக் கல்லூரி பரீட்சைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பேரில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி 2020 டிசம்பரில் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி கவுன்சிலால் வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்க்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் உட்பட பல தரப்பினரும் இந்த நடவடிக்கையை விமர்சித்ததோடு, இது பெரும்பான்மையான மாணவர்களுக்கு நியாயமற்றது என்றும் கருதியமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post