தற்போதைய வேலைநிறுத்தம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசின் வரி அறவீட்டு திட்டம் மற்றும் வழங்கப்படாத சம்பள உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
மேலும் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post