பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் கீழ் புதிதாக உருவாக்கவுள்ள சட்ட மறுசீரமைப்புக் குழுவுக்கு தலைமைதாங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் சார்ந்த அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தொலைபேசி ஊடாக பிரதமர் ரணில் கோரியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்புத் தெரிவித்தது.
தற்போது நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ஸ்திரமான அரசாங்கம் இன்றியமையாதது எனத் தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், தற்போதைய அரசாங்கத்தின் சரியான செயற்பாடுகளை ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் சட்டபூர்வமற்றது என்று கூறியிருந்தார்.
Discussion about this post