சண்டிலிப்பாய், தொட்டிலடியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அளவெட்டியைச் சேர்ந்த கனி என்று அழைக்கப்படும் ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு வந்த போது அளவெட்டி கனி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளனர். தலையில் படுகாயமடைந்த அளவெட்டிக் கனி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வாள்வெட்டுக்கு இலக்கானவர் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்னர்.
அதேவேளை, வாள்வெட்டுக் கும்பல் தப்பித்து சங்குவேலி பகுதியால் பயணித்த போதும் வீதியில் கடமையிலிருந்த மானிப்பாய் பொலிஸார் கண்டுக்காமல் நின்றனர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post