சமையல் எரிவாயு விநியோகம் எதிர்வரும் புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், ஆறு நாள்களுக்கு மட்டுமே எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தது.
3 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு நாளை திங்கட்கிழமை நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. ஆயினும் விநியோகம் இரு நாள்களின் பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 ஆயிரத்து 300 மெற்றிக்தொன் எரிவாயுவை மூன்று நாள்களுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும் என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம், எதிர்வரும் 27ஆம் திகதி மேலுமொரு தொகுதி சமையல் எரிவாயு நாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் நாம் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், நாம் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், அரசாங்கம் நிதிகளை விடுவிக்கும் என்று நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post