நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் விதிமீறல் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) அறிவித்துள்ளது.
இலங்கையில் 2024 இற்கான ஜனாதிபதி தேர்தலானது வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் விதிமீறல்
38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இந்தத்தேர்தல் களமானது நாடளாவிய ரீதியில் பரபரப்பான பிரசாரங்களுடன் சூடுபிடித்துள்ளது.
இந்தநிலையில், இவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளானது சட்டவிரோதமாகவோ அல்லது தேர்தல் விதிமீறல்களை தாண்டியோ வன்முறைகளை தூண்டும் நோக்கத்திலேயோ இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் இதனை தாண்டி முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட வண்ணமே உள்ளன.
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சூழலில் 2024 ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு குறித்த விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post