வாக்கு எண்ணிக்கை இடம்பெற்று முடிவுகள் வெளியாகும் போது பின்பற்றவேண்டியவை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் நேற்றையதினம் (19) கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.அதன் போது, ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்ததாவது, “வாக்குப்பதிவுக்குப் பிறகு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டும், வாக்கும் எண்ணும் நிலையங்களுக்கு அருகில் அல்லது வீதிகளில் இருக்க வேண்டாம் என கோருகிறோம்.
சட்டத் தடை
வாக்கு எண்ணிக்கையின் போது, மக்கள் தொலைக்காட்சி அல்லது பெரிய திரையைப் பயன்படுத்தி வீதிகளில் ஒன்று கூடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, முடிவுகள் ஒளிபரப்பப்படும் போது குழுவாகத் திரண்டு, பட்டாசுகளை வெடித்தல், வீதிகளில் வினோதமாக இருத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கூட்டங்கள் அனைத்தும் சட்டவிரோமானது. பாதுகாப்புப் பிரிவினர் அவர்களை கலைக்கலாம் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யலாம்.” என்றார்.
Discussion about this post