ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று (21-09-2024) சனிக்கிழமைகளுக்கான வழக்கமான ரயில் நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இடிபோலகே தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (22-09-2024) நீண்ட தூர ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
மேலும் தெரிவிக்கையில்,
குறுகிய தூர புகையிரத பயணங்களில் குறிப்பிட்ட அளவு குறைவடையலாம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட புகையிரதத்தை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Discussion about this post