தற்போது வரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு(Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
அதாவது ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 16 வரையிலான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினம் 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் அவையனைத்மும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
519 முறைப்பாடுகள் 519 புகார்களில், தேசிய தேர்தல் புகார் மேலாண்மை மையம் 306, தேர்தல் புகார் மேலாண்மைக்கான மாவட்ட மையங்கள் 213 புகார்களை பெற்றுள்ளன.
அனைத்து புகார்களும் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டள்ளதுடன் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post