இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Premitha Bandara Tennakoon) பணிப்புரை விடுத்துள்ளார்.பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இன்று (26) சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூடிய போது, குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமான அறிவித்துள்ளது.
பணிப்புரை இந்த நிலையில், இலங்கை, அரசியலமைப்பு மற்றும் பொது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், கடந்த இரண்டு வருட காலத்துக்குள் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சுக்கு பல முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும், இதன்படி, தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடிந்ததாக பிரமித்த பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.பாதுகாப்பு அமைச்சு தயார்இதன்படி, இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முக்கிய தீர்மானங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முப்படையினரை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post