எதிர்வரும் தேர்தல்கள் (Elections) தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து, முறையான முடிவு எடுக்கப்படும் வரை பொதுஜன பெரமுனவின்(Sri Lanka Podujana Peramuna) அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக் கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைமையகம் எடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
பொதுஜன பெரமுன தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளில் பிளவுபட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் அந்தக்கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) வேட்புமனுவை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.
அந்தவகையில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த(Susil Premjayantha), பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) மற்றும் அலி சப்ரி(Ali Sabry) ஆகியோர் அடங்குவர்.
அத்துடன் கட்சியில் மற்றொரு பிரிவினர் கட்சி சொந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்தே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கருத்துக்கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post