தேர்தலை நடாத்துவதில் எவ்வித சட்ட சிக்கல்களும் கிடையாது என பெபரல் எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தேர்தல் பற்றி கூற்றுக்களை வெளியிட்ட போதிலும், தேர்தல் நடாத்துவதற்கு சட்ட ரீதியான தடையில்லை என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை நீதிமன்றம் மே 11ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் சுற்றுநிருபங்களின் அடிப்படையில் அரசாங்கம் தேர்தலுக்கான நிதி வழங்குவதனை முடக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணை நாடாளுமன்றில் உதாசீனப்படுத்தப்படுவது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் செயற்பாடுகளுக்காக ஏற்கனவே 500 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நடத்தப்படாவிட்டால் இவ்வாறு பணம் விரயம் செய்யப்பட்டமைக்கான பொறுப்பினை அரசியல் தலைமைத்துவமும் அரசாங்க அதிகாரிகளும் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Discussion about this post