இலங்கையில் எதிர்வரும் செப்படம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
வாக்காளர் வாக்குச்சீட்டில் தான் வாக்களிக்கவுள்ள வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரில் அதற்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 என்ற இலக்கத்தை குறித்து வாக்கைப் பிரயோகித்தல் வேண்டும்.
அதன் பின்னர், 2 மற்றும் 3 என்ற இலக்கங்களை குறிப்பதன் மூலம் இரண்டு வேட்பாளர்களுக்கு தனது விருப்புத் தெரிவை குறிப்பட முடியும்.
வாக்காளர் தனது 2 மற்றும் 3 விருப்புத் தெரிவுகளை அடையாளமிடவில்லை,இருப்பினும் அதில் முறையானவாறு ஒரு வேட்பாளருக்கு அடையாளமிடப்பட்ட வாக்கொன்று காணப்பட்டால் அது செல்லுபடியான வாக்கொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
வாக்காளரின் உளக்கருத்து வாக்குச்சீட்டில் ஏதேனும் தெளிவான அடையாளம் ஒன்று (உதாரணமாக; x என்ற அடையாளம்) காணப்பட்டால் அது வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்கொன்றாக கருதப்படும்.
முழு விபரம் இதோ,
Discussion about this post