ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணிலுக்கே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா (K.Inbarasa) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை இன்று (24) புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) சந்தித்து இருந்தோம்.
தமிழ் அரசியல்வாதிகள்யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் முன்னாள் போராளிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதிவிக்காக சண்டை பிடிக்கிறார்களே தவிர முன்னாள் போராளிகள் தொடர்பில் பேசுவதில்லை
எமது முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்பவர்களும் மற்றும் வெளிநாட்டில் இருந்து எம்மோடு இணைந்து பயணிப்பவர்களும் எம்மை ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்திக்க சொன்னார்கள்.நாம் சந்தித்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேசியிருந்தோம்
முன்னால் போராளிகள்இதன்போது எமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, நிச்சயமாக எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பிரகாரம் எமது கட்சி ரணிலை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளது.வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் வீணாக போராளிகளை அழைத்து விசாரணைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.3000 பேரின் பெயர் விபரங்களும் வழங்கியுள்ளோம் அவர்களுக்கு முதற்கட்டமாக வேலைத்திட்டங்களை வழங்குவதாக தெரிவித்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post