ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் செலவிடும் பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகளவான பணத்தை செலவழித்து விருப்புரிமைகளை பெற்றுக்கொள்வதன் காரணமாக இந்த புதிய சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் செலுத்தியுள்ளார்.
1977 தேர்தலில், செலவு செய்யக்கூடிய பணம் மட்டுப்படுத்தப்பட்டது மற்றும் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட விருப்பு வாக்கு முறையின் கீழ், சில வேட்பாளர்கள் ஒரு தேர்தலுக்காக 20 முதல் 50 மில்லியன் வரை செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Discussion about this post