கலாவெவ தேசிய பூங்காவில் (Kalawewa National Park) உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அநுராதபுரம் (Anuradhapura) – கல்கிரியாகம காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நேற்று (06) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கலாவெவ தேசிய பூங்காவிற்கு சொந்தமான கல்கொடவல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் சடலம் மிதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை மரணம்கண்டெடுக்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், உடலில் இருந்து இரண்டு கைகள் மற்றும் ஒரு கால் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும், உயிரிழந்தவர் யார் என்ற அடையாளம் இதுவரை வெளியாகாத நிலையில், இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்
சந்தேகத்திற்கிடமான குறித்த மரணம் தொடர்பில், கெக்கிராவ (Kekirawa) நீதவானால் நேற்று பிற்பகல் ஸ்தல விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், கெக்கிராவ நீதவான் முன்னிலையிலேயே கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் கெக்கிராவ காவல்துறையினருக்கு வழங்கிய உத்தரவிற்கமைய, கல்கிரியாகம காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Discussion about this post