தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்தவிடம் நேரில் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை, நிறைவேற்று அதிகார முறைமையை இல்லது ஒழிப்பது மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை குறித்து தமித் தேசிய கூட்டமைப்பு கூடி கலந்துரையாடி முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post