சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக உயர்ந்துள்ளது.
400 முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாதாரண தர தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 560 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளது.
தேங்காய், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பால் அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு கட்டுப்பாடான விலையில் உணவு வழங்கும் வியாபாரிகள் உணவு தயாரிப்பதில் பெரும் செலவுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
தேங்காயின் கையிருப்பு குறைவினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எம். உபசேனா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் போதியளவு தேங்காய் கையிருப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தேங்காய் விலை குறையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post