இலங்கை மிக அண்மைய நாள்களில் மிகப் பெரிய நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகின்றது. இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமான தமிழ் மக்கள் மீது காலம் காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் இன்று வரை தொடர்ந்துவருவது வேதனைக்குரியது என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது, தென்னிலங்கை மக்கள் நெருக்கடி நிலைமைக்கு எதிராக பெரும் எழுச்சியுடன் போராடி வருகின்றனர்.
தென்னிலங்கை மக்களின் இந்த எழுச்சியின் நியாயத்தை, கடந்த காலங்களில் பேரவலத்தைச் சந்தித்த இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாம் புரிந்து கொள்கின்றோம். உணர்ந்து கொள்கின்றோம். மதிக்கின்றோம்.
ஆனால் இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமான தமிழ் மக்கள் மீது காலங் காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும் அடக்குமுறைகள் இப்போதுவரையில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.
இந்தத் தருணத்தில் சிங்கள் மக்கள் தமிழ் மக்களாகிய எமது வலிகளையும், நியாயங்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.
உங்களைப் புரிந்து கொள்கின்றோம், எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக இருக்கின்றது என்பதை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது என்றுள்ளது.
Discussion about this post