கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், தென்னிந்திய துறைமுகத்தையும் இணைக்கும் பாலத்தை
அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முற்பகல்
இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் திருகோணமலை, கொழும்பு மற்றும் தென்னிந்திய துறைமுகங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் அடையாளம் கண்டனர்.
இதன் முதற்கட்டாக, இரு தலைவர்களுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, நேரடியாக பாலத்தை அமைப்பதா? என்பது தொடர்பில், தொடர்ச்சியாக கலந்துரையாடி விடயங்களை
ஆராய்ந்து, தீரமானத்திற்கு வரவேண்டும். இதனூடாக, எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பது அர்த்தமல்ல.
முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி, ஆராய்ந்து, குறித்த திட்டம் தங்களுக்கு கிடைத்த பின்னர், அதனை
நாடாளுமன்றில் முன்வைத்து, அரச மற்றும் ஏனைய தரப்புடன் இணைந்து தீர்மானம் மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Discussion about this post