2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக் கொன்று இறைச்சிக்காக விற்கக் கூடாது என்ற புதிய சட்டம் தென் கொரிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக அந்நாட்டு மக்களிடையே நாய் இறைச்சி உண்ணும் ஆசைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, இறைச்சிக்காக நாய்களை கொல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், நாய் இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு சியோலில் உள்ள விலங்குகள் நல அமைப்பான அவேர் நடத்திய ஆய்வின்படி இன்று, பல தென் கொரியர்கள், குறிப்பாக இளைஞர்கள், நாய் இறைச்சி சாப்பிடுவதை திகிலூட்டுவதாக பார்க்கிறார்கள். தென் கொரிய பெரியவர்களில் 93 சதவீதம் பேர், எதிர்காலத்தில் நாய் இறைச்சியை உண்ணும் எண்ணம் இல்லை என்றும், 82 சதவீதம் பேர் தடையை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளனர்.
தடை விதிக்கப்பட்டதன் மூலம், தென் கொரியா, ஹொங்கொங், இந்தியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாய் இறைச்சி வர்த்தகத்தைத் தடை செய்த பிற நாடுகளின் பட்டியலில் இணைந்தது என்று Chae Jung-ah குழு தெரிவித்துள்ளது.
கம்போடியா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான நாய்கள் அவற்றின் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன என்று ஆஸ்திரியாவின் விலங்கு நல அமைப்பான ஃபோர் பாவ்ஸ் தெரிவித்துள்ளது.
Discussion about this post