பிலியந்தல, சுவரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயது திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த நிலையில் குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெறவுள்ளது.
Discussion about this post