தமது விடுதலைக்காக தம்மையே ஆகுதியாக்கியவர்களை நவம்பர் 27 ஆம் திகதி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் நினைவு கூர்ந்தனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பது விடைகாண முடியாத புதிராகவே உள்ளது.
எனினும் அவர்கள் தம்மையே ஈகம் செய்துவிட்டார்கள் என்பது பெரும்பாலானோரின் மதிப்பீடு.
ஆனால் 14 வருடங்கள் கடந்து இம்முறை மாவீரர் தினத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாராகா என்ற பெயரில் யாரோ ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக பெண்ணொருவரை உருவகப்படுத்தி மாவீரர் தின பேச்சு ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது களத்தில் நின்ற அனைவருக்கும் தெரிந்த நிலையில் தற்போது இவ்வாறான அரங்கேறுதல்கள் ஏன் என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுவது இயல்பானதுதான்.
போரில் மடிந்தவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் புல்லுருவிகள் இவர்கள் என தமிழ் மக்கள் கூறுவதும் வெளிப்படை. 1
4 வருடங்கள் கடந்து ஏன் இந்த நாடகம்.மீண்டும் தமிழ் மக்களை அவல வாழ்வில் தள்ளுவதற்காகவா..!
Discussion about this post