ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியாகக் கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்று கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தயார் உயர்நீதிமன்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்திருந்தனர்.
அந்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவுக்கான பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், துமிந்த சில்வாவைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post