கனடா ரொரண்டோவில் தமிழர் அங்காடியில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
2900 மார்க்கம் ஸ்டிலில் அமைந்துள்ள மஜிஸ்ரிக் சிட்டி மோல் உட்புற தமிழர் அங்காடியில் கனேடிய நேரம் இன்று மாலை துப்பாக்கி முனையில் நகைக்கொள்ளை நடைபெற்றுள்ளது.
துப்பாக்கி தாரர்கள் நகை திருத்தும் இடத்திற்குச் சென்றபோது நகைக் கடை உரிமையாளரின் மனைவி கூச்சலிட்டபோது மற்றுமொரு வாணிப உரிமையாளர் அவர்களுடைய கதவை மூடி தடுத்து நிறுத்த முற்பட்டபோது கொள்ளையர்க்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, கொள்ளையடித்த நகையுடன் தப்பிச்சென்றுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளிவராத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இக் கொள்ளைச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய சாட்சியத்தினை தற்போது பார்க்கலாம்.
Discussion about this post