தீவிரவாத சந்தேக நபருக்கு எவ்வாறு கனடாவில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஐஎஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
20 வயதான முகமட் சஹாஸெப் கான் என்ற பாகிஸ்தானிய பிரஜை இவ்வாறு பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை, கியூபெக் போலீசார் கைது செய்திருந்தனர்.அமெரிக்கா யூதர்களை இலக்கு வைத்து ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு இந்த நபர் முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஐ எஸ் தீவிரவாதி எவ்வாறு கனடாவிற்கு வருகை தந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என கான்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.ஏற்கனவே தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த தந்தையும் மகனையும் கனடிய போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.தீவிரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறித்து அரசாங்கம் தகவல்களை அம்பலப்படுத்த வேண்டுமென கோரியுள்ளது
Discussion about this post