அரசாங்கமும், ஜனாதிபதியும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் கொழும்பு, காலி முகத் திடலில் தொடர்கின்றது.
பெரும் எண்ணிக்கையான மக்கள் திரண்டு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இளைஞர்களும் யுவதிகளும் கடந்த 4 நாள்களாகக் கூடாரம் அமைத்து அந்தப் பகுதியிலேயே தங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு உணவுப் பொருள்கள், குடி தண்ணீர் என்பவற்றைத் தன்னார்வமாக வர்த்தகர்களும், பொதுமக்களும் வழங்கி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளனர்.
அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றும் நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
Discussion about this post