Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தீவிரமடையும் காய்ச்சல்! மருந்து பயன்பாடு குறித்து அவசர எச்சரிக்கை!

May 20, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தீவிரமடையும் காய்ச்சல்! மருந்து பயன்பாடு குறித்து அவசர எச்சரிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போது மூன்று வகையான காய்ச்சல்கள் பரவி வரும்நிலையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு நோய் அதிகளவில் பரவி வருகிறது. எனவே உங்கள் வைத்தியர் உங்களுக்கு காய்ச்சலுக்காக ஏதேனும் வலி நிவாரணியை தந்தால் அது பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணியா என வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணி எடுத்தால் டெங்கு ஏற்பட்டால் இரத்தக்கசிவு ஏற்பட்டு ஈரல் பாதிக்கப்படுவதுடன் மரணம் ஏற்படக்கூடிய நிலையும் அதிகரிக்கும் என குறிப்பிட்டார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு வழிவகுக்கும் என்பதால் நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்புளுவென்சா மிகக் கடுமையாகப் பரவும் என்றும், நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கு வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் காய்ச்சலும், நீண்ட நாள் இருமலும் வரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நீண்டகால சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றும், சுவாச நோய் உள்ளவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான வைரஸ் தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும் வைத்தியர் உபுல் திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்

Tags: #Dengue#DengueFever#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ரொறன்ரோவில் மீண்டும் பெற்றோல் விலை அதிகரிப்பு

Next Post

முற்றாக தடைப்படும் 2000 ரூபா நாணயத்தாள்

Next Post
முற்றாக தடைப்படும் 2000 ரூபா நாணயத்தாள்

முற்றாக தடைப்படும் 2000 ரூபா நாணயத்தாள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.