அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள தீபாவளி பண்டிகை கொணட்டாட்ட நிகழ்வு அழைப்பினை கனேடிய பெண் கவிஞர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
கனடாவின் பெண் கவிஞனான ரூபீஸ் கவுர் இவ்வாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை நிராகரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹரிஷ் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் என காவூர் தெரிவிக்கின்றார்.
எனினும் அமெரிக்க அரசாங்கம் காசாவில் இடம் பெற்று வரும் அழிவுகள் குறித்து பின்பற்றும் நிலைப்பாட்டில் தமக்கு உடன்பாடு கிடையாது என ஒரு தெரிவித்துள்ளார்.
காசா நிலப்பரப்பில் இஸ்ரேலிய படையினர் நடத்தும் குண்டு தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பினை தாம் நிராகரிப்பதாக பிரபல பெண் கவிஞர் கவூர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post