பல கோடி ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பிரபல சிங்கள நடிகரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்க மற்றும் அவரது மனைவி செரீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த கடந்த சனிக்கிழமை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர்.
ஜீவன் குமாரதுங்கவின் வாழ்க்கை அடிப்படையாக கொண்டு ‘ஜீவா’ என்ற திரைப்படத்தை தயாரிக்க திலினி பிரியமாலி பணம் செலவிட்டார் என்ற தகவலுக்கமைய அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discussion about this post