வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் குழு மருதானை தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.
குறித்த கைதி சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் சீருடையை அணிந்து வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்றுள்ளார். தப்பிச்சென்ற கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தப்பிச் சென்று பிடிபட்ட கைதியின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதுடன், கைதி தொடர்பான ஆவணங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொண்டுள்ளார். அதேசமயத்தில், பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post