மெட்டா நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த திரெஸ்ட் செயலி பயனர்களின் பேட்டரியை சீக்கிரம் தீர்த்து விடுவதாக அறியமுடிகின்றது.
இன்ஸ்டாகிராம் வாயிலாக டுவிட்டர் போன்ற ஒரு தளத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த 6ஆம் திகதி திரெஸ்ட் செயலியை அறிமுகம் செய்து,அதிகளவான பயனர்களையும் பெற்றது.
இந்நிலையில் திரெட்ஸ் செயலியால் விரைவில் தொலைபேசி பேட்டரிகள் தீர்ந்து விடுவதால் பலரும் அந்த செயலியை அன்-இன்ஸ்டால் செய்யப்போவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், குறுப்பிட்ட சில iPhone/iPadகள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுவதாக தெரிகிறது.
இதுகுறித்து மெட்டா நிறுவனம் கூறுகையில், அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுதற்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
திரெஸ்ட் செயலி பயனர்கள் தங்களது தொலைபேசியில் Background App Refresh வசதியினை ஆஃப் செய்யலாம்.
iOS சாதனங்களில், செட்டிங்ஸ் அமைப்பை ஓப்பன் செய்து, அதில் Generalஐ அழுத்தவும்.
பின்னர், Background App Refresh ஆப்ஷனை அழுத்தவும்.
அதன்பிறகு, மொபைல் டேட்டாவை க்ளிக் செய்து, திரெட்ஸ் பயன்பாட்டைக் கண்டறியவும். அதில், Allow background data usage ஆப்ஷனை அழுத்தவும்.
ஆண்ட்ராய்டு சாதனங்களில், செட்டிங்ஸ் அமைப்பை ஓப்பன் செய்து Connections என்பதை அழுத்தி, பின்னர் Data Usageஐ அழுத்தவும்.
பின்னர், தொலைபேசி டேட்டாவை அழுத்தி, திரெட்ஸ் பயன்பாட்டைக் கண்டறியவும். அதில், Allow background data usage ஆப்ஷனை ஆஃப் செய்யலாம்
Discussion about this post