உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்சினி சிவலிங்கம் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனை சொந்த இடமாக கொண்ட தர்சினி சிவலிங்கம் யா/ வசாவிசான் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார்.
தேசிய வலைப்பந்து அணியிலிருந்து கடந்த வருடம் ஓய்வுபெற்றபோதும் ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடி வருகின்றார்.
இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர் எனும் பெருமையை பெற்றா தர்சினி, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம் ஆண்டு வகித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது தென்னாபிரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் – இலங்கை சார்பாக விளையாடிய பின்னர், தனது ஒய்வை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந் நிலையில் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த தர்சினி சிவலிங்கத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள்.
Discussion about this post