கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
அகில இலங்கை திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சுசந்த ஹேமசிறி ரணசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதம் திருமண மாதமாக காணப்படுகின்றமையால் கடந்த காலங்களில் திருமண மண்டபங்களுக்கான முன்பதிவுகள் அதிகமாக காணப்பட்டன. எனினும் தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post