திருகோணமலை(Trincomalee) மூதூர் இம்முறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக நெற்செய்கையில் என்றுமில்லாதவாறு கபிலநிறத்தத்தியின் தாக்கத்தால் பல விவசாயிகளின் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாகவே இந்நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் எந்த கிருமி நாசினிக்கும் கட்டுப்படாது வேகமாக பரவுவதால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்படுமெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் நிலை
அதிகளவான நோய்த்தாக்கம் கீரி சம்பா நெற்செய்கையினை தாக்கியிருப்பதோடு கீரி சம்பா நெல் ஒரு மூட்டை 6400 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதால் விவசாயிகள் இம்முறை நட்டமடையும் நிலை ஏற்படுமெனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசாங்கம் விவசாயிகளின் நிலையினை கருத்தில் கொண்டு மானியங்களினை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Discussion about this post