திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை புணைரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தை
நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தம் நேற்று மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி
அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய
கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார்
நிறுவனம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இதற்கமைய, 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும்
ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும்
கொடுக்கபட்டுள்ளன.
Discussion about this post