யாழ்ப்பாணத்தில் இரண்டரை மாதக் குழந்தை ஒன்று திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த கா.அஸ்மிகா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்றுமுன்தினம் பிற்பகல் சிசுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிசு தாய்ப்பால் கொடுக்கப்பட்ட நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்துக் குழந்தை சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
ஆயினும் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post