Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

திடீரென பின்வாங்கிய கனேடிய அமைச்சர்

September 12, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
திடீரென பின்வாங்கிய கனேடிய அமைச்சர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்றும், ஆகவே, கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறிய கனடா அமைச்சர் ஒருவர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆக, அவர்களால் வீடு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
சமீபத்திய தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி பின்தங்கியதற்கு, வீடுகள் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆகவே, அதை சமாளிக்க அரசு திட்டமிட்டுவரும் நிலையில், கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார் அவர். கனடாவில் நிலவும் வீடு பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்வதற்காக சர்வதேச மாணவர்களின் என்ணிக்கையைக் கட்டுப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், நிதர்சனம் என்னவென்றால், கனடா மட்டுமல்ல, ஜேர்மனி முதலான பல நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த, வெளிநாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள். அதுவும் கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு பல்வேறு துறைகளில் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

உலகமெங்கும், பல நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பணி ஓய்வு பெறுகிறார்கள் பலர். ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு தகுதிபடைத்த இளைஞர்கள் இல்லை.

ஆக, பல நாடுகள் பணியிடங்களில் நிலவும் காலியிடங்களை நிரப்ப திணறிவருகின்றன. கனடாவும் அப்படித்தான். Sean Fraser முன்பு புலம்பெயர்தல் அமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம், கனடாவுக்கு புலம்பெயர்வோரை வரவேற்பது குறித்தே பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.

சர்வதேச மாணவர்கள் கனடாவுக்குத் தேவை என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்குப் பின் அவரது பேச்சே மாறிவிட்டது.

கனடாவில் வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்றும், ஆகவே, கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார் அவர்.

ஆனால், தற்போது அப்படியே அந்தர் பல்டி அடித்து, கனடாவுக்கு வெளிநாட்டு மாணவர்கள் அவசியம் என்று மீண்டும் கூறியுள்ளார் Sean Fraser. அமைச்சரின் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

Tags: #canadiangovernment-#ImmigrationRule#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

மனைவியை வெட்டி கொலை செய்த இலங்கையர் கைது

Next Post

காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Next Post
காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.