அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை அதிபர் ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விமானப்படை கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார்.
ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதிபர் பைடன் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்த பகுதியில் மணல்மூடையொன்று காணப்பட்டது என ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேடைக்கு செல்லும்போது பைடன் மணல்மூடையில் தடுக்கி விழுந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நிலத்தில் விழுந்த பைடனை விமானப்படை அதிகாரிகளும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தூக்கிவிடும் வேளை ஜனாதிபதி மணல்மூடையை நோக்கி கைகளை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
Discussion about this post